தேவை

Posted on 09 Jan 2017 in Literature


அவரவர்க்கு அவரவரை அடையாளம் காட்டும் தேவை தேவை...

தெரியாமல் தவிர்த்து தான்
சுழன்றோடும் வழியெலாம்
புரியாத புதிரினம்
விளங்காது இயம்பிலும்
ஒரு நாளில் இவையெலாம்
நிறம் மாறும் கணம்வரும்
இது போலே வழியிலை
என மாறி பகர்ந்திடும்
நடந்தேறும் இது தினம்
நிழலாடா நிதர்சனம்
உருபோட்டு உமிழ்ந்திடும்
தின வாழ்வின் காரணம்,
எவர் வேண்டும் எது வேண்டும்
என அறியா தன் காவியம்
இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும்
நிஜ வாழ்வின் ரகசியம்
கணம் மாறும் உலகினில்
தடுமாறிடும் மனம்
தடமும் மாறிடும்
முடியாதன நிகழ்த்திடும்,
அவர்க்கே அவர்தம்
அடையாளம் காட்டிடும்,
தேவை தேவை...

- அன்பன் பாபு.

Comments